உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா - கமல் திடீர் சந்திப்பு

இளையராஜா - கமல் திடீர் சந்திப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் தயாராகி வருகிறார். இந்நிலையில் சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜா துவங்கிய புதிய ஸ்டுடியோவுக்கு முதன்முறையாக சென்று பார்வையிட்டார் கமல். இருவரும் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர். கமல், இளையராஜா தொடர்பான ஆல்பங்களையும் பார்த்து ரசித்துள்ளனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !