அட்டகத்தி நந்திதா வீட்டில் நிகழ்ந்த சோகம்
ADDED : 1560 days ago
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நந்திதா. குடும்பப் பாங்கான வேடங்களாக நடித்து வந்த அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் கதையின் நாயகியாக சில ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் நந்திதா.
இந்தநிலையில் தனது தந்தை சிவசாமி (வயது 54) திடீரென மரணம் அடைந்து விட்டதாக ஒரு சோக செய்தியை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் நந்திதா. ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருதோடு, உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்றும் நந்திதாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.