உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் பீஸ்ட் படக்குழு டில்லி சென்றது

விஜய்யின் பீஸ்ட் படக்குழு டில்லி சென்றது

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். விஜய். இவருடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் உள்பட பலர் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டு அதையடுத்து சென்னையில் பல கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று(செப்., 20) பீஸ்ட் படக்குழு டில்லி சென்றுள்ளது. அங்கு இரண்டு வாரங்கள் வரை படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிடும் என்கிறார்கள். ஏற்கனவே சென்னையில் விஜய் - பூஜா ஹெக்டே பங்கேற்ற டூயட் பாடல் ஒன்று படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அதன்பிறகு பாடல் மற்றும் ஆக்சன் காட்சிகள் மட்டுமே மீதம் இருக்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !