உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனிமி- தெலுங்கு டப்பிங்கை தொடங்கிய விஷால்

எனிமி- தெலுங்கு டப்பிங்கை தொடங்கிய விஷால்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படம் எனிமி. இப்படம் விஷாலுக்கு 30வது படம். ஆர்யாவுக்கு 32ஆவது படமாகும். இவர்களுடன் மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் படம் அக்டோபர் 14-ந்தேதி வெளியாக உள்ளது. மேலும் இதே நாளில் தெலுங்கிலும் எனிமி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள விஷால், தெலுங்கு பதிப்பிற்கான டப்பிங்கை தற்போது தொடங்கியிருக்கிறார். அந்த தகவலை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !