உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் அடுத்த படம் விரைவில்... - சிவா இயக்குகிறார்

சூர்யாவின் அடுத்த படம் விரைவில்... - சிவா இயக்குகிறார்



தற்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலை படப்பிடிப்பே இன்னும் முடிவடையவில்லை. அதனால் அவர் அந்த படத்தை முடித்து விட்டு வருவதற்குள் சிவா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா.

தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்த மாதத்திலேயே சூர்யா - சிவா கூட்டணி களத்தில் இறங்கி விடுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு அந்த படத்திற்காக தற்போது செட் போடும் பணிகளும் நடைபெற்று வருவதால் அந்த செய்தி இன்னும் உறுதியாகி இருக்கிறது.

மேலும், அண்ணாத்த படத்திற்கு முன்பே சூர்யா நடிக்கும் படத்தை தான் இயக்கயிருந்தார் சிறுத்தை சிவா. திடீரென்று ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததால் சூர்யாவிடம் விசயத்தை சொன்னபோது அவரும் ரஜினி படத்தை இயக்கிவிட்டு வருமாறு அனுமதி கொடுத்ததோடு, அந்த படம் முடிந்ததும் நாம் இணைவோம் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது அண்ணாத்த பட வேலைகள் முடிந்து விட்டதால் சூர்யாவுடன் கூட்டணி அமைக்கிறார் சிறுத்தை சிவா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !