மியா ஜார்ஜ் வீட்டில் நிகழ்ந்த சோகம்
ADDED : 1489 days ago
தமிழில் அமரகாவியம் படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். தொடர்ந்து ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள மியா, தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவரது தந்தை ஜார்ஜ் ஜோசப் காலமானார். இன்று அவரது இறுதிச்சடங்கு நடந்தது.
75 வயதான அவர் சமீப நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மினி என்கிற மனைவியும் மியா தவிர கினி என்கிற இனொரு மகளும் உள்ளனர். கடந்த வருடம் தான் அஸ்வின் பிலிப் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்தார் மியா ஜார்ஜ், இந்த ஜூலையில் லுக்கா என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்தவகையில் மியாவின் திருமணத்தையும் பேரக்குழந்தையையும் கண்குளிர பார்த்துவிட்டே மறைந்துள்ளார் அவரது தந்தை ஜோசப் ஜார்ஜ்.