உடற்பயிற்சியில் ப்ரியா பவானி சங்கர் ஆர்வம்
ADDED : 1485 days ago
மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் குருதியாட்டம், ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2 , 10 தல என புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தொடர்ந்து தனது போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். தனது உடலை ஸ்லிம்மாக வைத்து இளைஞர்களை கவர்ந்து வரும் பிரியா பவானி ஷங்கர், தொடர்ந்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.