உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛‛நான் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி - தெறிக்கும் வலிமை கண்ணோட்டம்

‛‛நான் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி - தெறிக்கும் வலிமை கண்ணோட்டம்

வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛வலிமை. கொரோனா பிரச்னையால் நின்று நின்று துவங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நிறைவடைந்தது. இதையடுத்து படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்முரமாய் துவங்கி உள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வலிமை அப்டேட் என கேட்டு வந்த ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள் என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகின்றனர். நேற்று திடீரென படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது என அப்டேட் கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று(செப்., 23) திடீர் சர்ப்ரைஸாக வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் என்ற பெயரில் டீசர் மாதிரியான கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளனர். ‛‛நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள், சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் வலை தான் எங்கள் உலகம். என பைக்கில் சாகசம் செய்தபடி பின்னணியில் குரல் ஒலிக்க தீ பொறி பறக்க, அனல் தெறிக்க அஜித் என்ட்ரியாவது போன்று முன்னோட்டம் துவங்குகிறது.

‛‛அர்ஜூன் நீ என் ஈகோவைதொட்டுட்ட கெட் ரெடி பார் கேம் என வில்லன் கார்த்திகேயா பேச, அஜித் பைக்கில் அதிவிரைவாக பயணிப்பதும், ‛‛நான் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி என அஜித் பேசும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. 1.27 நிமிடம் உள்ள இந்த கண்ணோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் அஜித்தின் பைக் சாகசம் ரசிகர்களுக்கு பெரிய அளவில் விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிளிம்ப்ஸ் வெளியான ஒரு மணிநேரத்திலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று சமூகவலைதளங்களில் டாப்பில் டிரெண்ட் ஆனது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !