மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1443 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1443 days ago
பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களில் ஒருவராக வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது. போட்டியாளர்களின் உத்தேச பட்டியலும் நாளுக்கு நாள் மாற்றங்களுடன் உலா வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் ப்யூட்டி சலூன் நடத்தி வரும் தொழிலதிபரான ரேணுகா பிரவீன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ரேணுகா பிரவீன் சென்னையில் ப்யூட்டி சலூன் வைத்து நடத்தி வருகிறார். திரை பிரபலங்கள் குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் அவரின் ரெகுலர் கஷ்டமராக உள்ளனர். பிக்பாஸின் அனைத்து சீசன்களிலும் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனுக்கு ரேணுகா பிரவீன் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1443 days ago
1443 days ago