ஹாலிவுட் பாணியில் படமெடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
ADDED : 1490 days ago
விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்தும் விஜய்க்கு ஒரு கதை சொன்னார். அந்த கதை விஜய்க்கு திருப்தி கொடுக்காமல் போனதால் அவர்கள் மீண்டும் இணையவில்லை. அதன்பிறகுதான் விஜய்யின் 65ஆவது படவாய்ப்பு நெல்சனுக்கு சென்றது.
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஜூராசிக் பார்க் பட ஸ்டைலில் ஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாக வைத்து அவர் ஒரு படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரப்பரில் செய்த விலங்குகளை வைத்து, அந்த படத்தை அனிமெட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் எடுத்தது போலவே முருகதாசும் தனது புதிய படத்தை அதேபோன்ற ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் எடுக்கப்போகிறாராம். இந்த படத்தை டில்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.