திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் மகள்கள்
ADDED : 1490 days ago
சமீபத்தில்தான் நடிகைகள் ஸ்ரேயா, சமந்தா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோரும் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களுடன் செளந்தர்யாவின் கணவர் விசாகன், மகன் வேத் கிருஷ்ணா ஆகியோரும் சென்றுள்ளனர்.மேலும், கோயிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.