உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 7 வருடங்களுக்குப்பிறகு தெலுங்கில் ஜி.வி.பிரகாஷ் ரீஎன்ட்ரி

7 வருடங்களுக்குப்பிறகு தெலுங்கில் ஜி.வி.பிரகாஷ் ரீஎன்ட்ரி

தமிழில் படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், சர்தார், ஜெயில், வாடிவாசல் என பல படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் நடித்த டார்லிங் மற்றும் உல்லாசம்கா உத்சம்கா, நானி நடித்த ஜெண்டா பை கபிராஜூ போன்ற படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதோடு அவர் இசையமைத்த பல தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பாகி வெளியாகியுள்ளன. இந்த நிலையில், 7 வருடங்களுக்குப்பிறகு தற்போது தெலுங் கில் ரவிதேஜா நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்க ஒப்பந்த மாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !