மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ்
ADDED : 1485 days ago
கன்னடத்தில் உருவான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியுள்ள பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, கன்னடத்தில் உருவாகி வரும் இப்படம் 2022 ஏப்ரலில் வெளியாகிறது.
இதையடுத்து ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படம் என நடித்து வரும் பிரபாஸ், சலார் படத்தை அடுத்து மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறாராம். புராண ஆக்சன் திரில்லர் கதையில் அப்படம் உருவாகிறது. சலார் படவேலைகள் முடிந்ததும் அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை தொடங்குகிறாராம் பிரசாந்த் நீல்.