உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேதாளம் ரீமேக் : சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் தமன்னா

வேதாளம் ரீமேக் : சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் தமன்னா

தற்போது தெலுங்கில் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இந்த படத்தை அடுத்து தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கர் படத்தில் நடிக்கிறார். மெஹர் ரமேஷ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்திற்கான நாயகி பரிசீலணை நடைபெற்று வந்தநிலையில் தற்போது தமன்னா ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த வக்கீல் ரோலில் அவர் நடிக்கிறாராம். மேலும் இதற்கு முன்பு சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டியில் நடித்த தமன்னாவுக்கு இது சிரஞ்சீவியுடன் இரண்டாவது படமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !