வடிவேலு கேரக்டரில் யோகிபாபு
ADDED : 1481 days ago
ஸ்வாதீஷ் இயக்கும், ‛கான்ட்ராக்டர் நேசமணி' படத்தில் யோகிபாபு, ஓவியா இணைந்து நடிக்கின்றனர். படத்தின் துவக்கவிழா இன்று(செப்., 24) நடந்தது. பிரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலுவின் கதாபாத்திர பெயரை தலைப்பாக வைத்தது மட்டுமின்றி ‛டைம் டூ லீட்' என்ற அடைமொழியுடன் வெளியாகியுள்ள போஸ்டர், மீண்டும் நடிக்க வந்துள்ள வடிவேலுவுக்கும் பிரசாரம் செய்யும் வகையில் உள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதாசிரியருமான அன்பு கூறுகையில், ‛‛குழந்தைகளுக்கான சயின்ஸ் பிக்சன் பாணி படமிது. யோகிபாபு நடிக்கும் மெகா பட்ஜெட் படம் இது,'' என்றார்.