பிளான் பண்ணலயோ...
ADDED : 1481 days ago
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடித்துள்ள நகைச்சுவை படம் பிளான் பண்ணி பண்ணனும். ஏற்கனவே சில முறை ரிலீஸ் தள்ளிப்போன இப்படம், இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்னையால் இப்படம் வெளியாகவில்லை. படத்திற்கான முன்பதிவு நடந்த நிலையில் படம் வெளியாகாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. தொடர்ந்து படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் நாளை கூட படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இல்லையென்றால் இன்னொரு நாளில் படம் வெளியாகலாம். இதனிடையே படத்தின் தலைப்பை பிளான் பண்ணனும்னு வச்சுட்டு ரிலீஸில் பிளான் பண்ணலயோ என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.