சீரியலில் நடிக்கும் ஜெய்சங்கர் மகன்
ADDED : 1496 days ago
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஜெய்சங்கரும் ஒருவர். இவர் பெரும்பாலும் படங்களில் அதிரடி சண்டை காட்சிகள், துப்பறியும் அதிகாரி, சிபிஐ ஆபிசர் போன்ற வேடங்களில் நடித்திருப்பார். எனவே இவரை தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தார்கள்.
ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் விஜய் சங்கர். இவர் கண் மருத்துவராக உள்ளார். இளைய மகன் சஞ்சய் சங்கர். இவர் நிறுவனம் ஒன்றை வருகிறார். சஞ்சய் சங்கர் இசை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தொழிலதிபர் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.