ஆரவ் மனைவி கர்ப்பம்
ADDED : 1554 days ago
பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னராக வென்றவர் ஆரவ். ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா அவர் மீது தீராத காதலில் இருந்தார். இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை ஆரவ் திருமணம் செய்து கொண்டுள்ளார் . நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இமை போல் காக்க' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிலையில் ஆரவ் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் முடிந்த நிலையில் இந்த மாதம் மாதம் மனைவியின் சீமந்தத்தை முடித்து இருக்கிறார் ஆரவ்.