உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யோகி பாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்

யோகி பாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சைமா விருது விழாவில் 2020-ம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது தாராள பிரபு படத்திற்காக விவேக்கிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதை யோகிபாபு வாங்கிக்கொண்டார்.

தற்போது நடிகர் விவேக்கின் மகள் விருது வாங்கி வீட்டில் வந்து ஒப்படைத்ததற்காக யோகிபாபுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தாராள பிரபு படத்திற்காக - 2020ம் ஆண்டில் நகைச்சுவை வேடத்தில் சிறந்த நடிகருக்கான விருதை என் தந்தைக்கு வழங்கியதற்கு நன்றி சைமா. யோகி பாபு அண்ணா அதைப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. எப்போதும் போல், ரசிகர்களுக்கு நன்றியும் கடமையும் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !