உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியலுக்காக மொட்டை அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

சீரியலுக்காக மொட்டை அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதில் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சரவண விக்ரம். இந்த தொடரில் கண்ணன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததிலிருந்து அவர்களுக்கான எழுதப்படும் எபிசோடுகள் சரவணனுக்கு தனி முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. சரவணனும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நடிப்பில் அசத்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.


இந்நிலையில் தொடரில் திருப்புமுனையாக லெஷ்மி அம்மாள் இறந்துவிடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தாயை பிரிந்த மகனாகவும், தாயின் இறுதி சடங்குகளை செய்தும் உருக்கமான காட்சி ஒன்றில் கண்ணன் நடித்துள்ளார். அந்த சீனுக்காக உண்மையாகவே அவர் மொட்டையடித்துள்ளார். அவரது இந்த அர்ப்பணிப்பான நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !