உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எஸ்பிபி-யை நினைவு கூறும் மம்முட்டி, மோகன்லால்

எஸ்பிபி-யை நினைவு கூறும் மம்முட்டி, மோகன்லால்

இந்தியத் திரையுலகில் பல்லாயிரம் ஹிட் பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் மரணம் அடைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாளை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அனுசரித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எஸ்பிபி பாடல்கள் பலவும் காலை முதல் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.

மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் எஸ்பிபி நினைவு தினத்தை அனுசரித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

“நம் மனதில் என்றென்றும் எப்போதும் ஈடு இணையற்ற அவரது தெய்வீகக் குரலால் நிறைந்திருப்பார். எஸ்பிபி சாரை அவரது முதல் நினைவு தினத்தில் நினைவு கூறுகிறேன்,” என்று மோகன்லால் டுவீட் செய்துள்ளார்.

மம்முட்டி, “லெஜன்ட் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிவிட்டது. அவரது பெரு மகிழ்ச்சியூட்டுகிற குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகிறேன்,” என்று டுவீட் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !