சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் - எஸ்பிபி குறித்து கமல் டுவீட்
ADDED : 1528 days ago
இந்திய சினிமாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடும் நிலாவான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வந்த நிலையில் நோய்க்கு பிந்தைய பாதிப்பால் மரணம் அடைந்தார். அவர் மறைந்து இன்றோடு ஓராண்டாகிவிட்ட நிலையில் திரையுலகினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால் தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்.