மேலும் செய்திகள்
விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்!
1455 days ago
'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு!
1455 days ago
'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
1455 days ago
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலமாக தியேட்டர்களைத் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கின.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தார்கள். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் தியேட்டர்களைத் திறப்பதை காலம் தாழ்த்தியே வந்தார்கள். இந்நிலையில் அக்டோபர் 22ம் தேதி முதல் அங்கு தியேட்டர்கள் திறக்கப்படும் என மாநில அரசு சற்று முன் அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் தீபாவளி வருவதை முன்னிட்டு அதற்கு முன்னதாகத் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், கங்கனா ரணவத் நடித்த 'தலைவி' படத்தின் வெளியீட்டிற்கு சிக்கல் ஏற்படுத்தவே தியேட்டர்கள் திறப்பைத் தள்ளிக் கொண்டு வந்தார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். இன்று 'தலைவி' ஹிந்திப் படம் ஓடிடியில் வெளியான தினத்தில் மகாராஷ்டிராவில் தியேட்டர்கள் திறப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளதையும் சிலர் சம்பந்தப்படுத்தி கமெண்ட் செய்துள்ளார்கள்.
இருக்கைகள் அனுமதி, மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. பாலிவுட் திரையுலகத்தைச் சேர்ந்த சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினர். அதன் பிறகே தியேட்டர் அறிவிப்பு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
1455 days ago
1455 days ago
1455 days ago