பப்லு செய்த சேட்டையில் பயந்து அலறிய கண்ணான கண்ணே நிமிஷிகா!
ADDED : 1516 days ago
கண்ணான கண்ணே தொடரில் அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதையாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டிஆர்பியிலும் ரோஜா தொடருக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் நாயகி மீரா கதாபாத்திரத்தில் நிமிஷிகாவும் தந்தையாக நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் பப்லுவும் நடித்து வருகின்றனர்.
சீரியலில் சீரியஸாக இருக்கும் பப்லு ஆஃப் ஸ்கிரீனில் ஸ்போர்டிவாக பல சேட்டைகளை செய்து செட்டை கலகலப்பாக வைத்திருப்பாராம். அந்த வகையில் நிமிஷா, பப்லு உள்ளிட்டோர் கண்ணான கண்ணே சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருக்க, பப்லு தரையில் ஊர்ந்து சென்று நிமிஷிகாவின் காலை சீண்டுகிறார், இதனால் பயத்தில் நிமிஷிகா துள்ளிக்குதித்து அலறுகிறார். இந்த வீடியோவை பப்லு தனது இண்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய அது தற்போது வைரலாக பரவி வருகிறது.