ரீமாவுடன் குத்தாட்டம் போட்ட பரீனா : இப்படியா ஆடுறது
ADDED : 1503 days ago
விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து வருபவர் பரீனா. இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த போது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பரீனா, கர்ப்ப காலத்தில் எடுக்கும் போட்டோஷூட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் விமர்சனங்களையும், அறிவுரைகளையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியின் சக நடிகையான ரீமாவுடன் சேர்த்து கொண்டு பரீனா குத்தாட்டம் போட்டுள்ளார். இன்ஸ்டாவில் அதை பார்க்கும் நெட்டீசன்கள் வயிற்றில் குழந்தையுடன் இப்படியா ஆட்டம் போடுவது? என பரீனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.