உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய்

மகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய்

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சரவண விக்ரம். கடந்த இரண்டு வாரங்களாக செண்டிமெண்ட் காட்சிகளாக நகர்ந்து வரும் இந்த தொடரின் கதையில் லஷ்மி அம்மாவின் மரணம், இறுதி சடங்கு எபிசோடுகள் டிஆர்பியில் நல்ல பாய்ண்டுகளை அள்ளி இருக்கிறது. அதிலும் இறுதிச் சடங்கின் போது கண்ணன் கதாபாத்திரத்தில் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்திய சரவண விக்ரம் பாராட்டுகளை பெற்று வருகிறார். சீரியலில் கண்ணன் அவரது அம்மா இறப்புக்காக கதறி அழும் காட்சிகளை பார்த்துவிட்ட சரவண விக்ரமின் தாயார் நிஜமாகவே கதறி அழுதுள்ளார். இந்நிலையில் சரவண விக்ரம் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !