உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உண்மையான ருத்ரதாண்டவத்தை பார்த்தோம் : ருத்ரதாண்டவம் படம் பார்த்த பின் ஹெச்.ராஜா பேட்டி

உண்மையான ருத்ரதாண்டவத்தை பார்த்தோம் : ருத்ரதாண்டவம் படம் பார்த்த பின் ஹெச்.ராஜா பேட்டி

மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, தர்ஷா குப்தா, கவுதம் மேனன், ராதாரவி நடித்துள்ள படம் ‛ருத்ரதாண்டவம். நாடக காதல், போதை கலாச்சாரம், பிசிஆர்., சட்டம் உள்ளிட்டவைகளை பற்றி இப்படம் பேச உள்ளது. அக்., 1ல் படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை பா.ஜ.வின் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.

படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா : உண்மையான ருத்ரதாண்டவத்தை பார்த்தோம். சினிமா என்பது பொழுதுபோக்கிறகாக மட்டுமல்ல. மக்களை நல்வழிப்படுத்துவதற்காக சமூக ரீதியாக, சட்ட ரீதியான ஒரு முயற்சி. இந்த படத்தை பொறுத்தமட்டில் மூன்று விஷயங்களை தம்பி மோகன் ஜி பேசி உள்ளார். ஒன்று 18 வயசுக்கு கீழ் உள்ள பெண் பிள்ளைகள் படிக்கிற காலத்துல படிக்க மட்டும் தான் கவனம் செலுத்தனும், காதலில் இல்ல. அதுப்பற்றிய பாடம் இந்த படத்தில் உள்ளது.

இரண்டாவது இன்னைக்கு இளைஞர்கள் போதையால் சீரழிந்து போகிறார்கள். 30 ஆண்டுக்கு முன்னர் முக்குக்கு முக்கோண விளம்பரம் பார்த்தோம். இன்னைக்கு செயற்கை கருத்தரிப்பு மையங்களை பார்க்கிறோம். இப்படியே போனால் நாளைக்கு தமிழன் தன் மனைவிக்கு தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இதற்கு முக்கிய காரணம் போதை கலாச்சாரம். அதை இளைஞர்களுக்கு புரிய செய்யும் நல்ல படமாக இந்த படம் இருக்கும்.


மூன்றாவதாக பிசிஆர்., சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களை தோலுரித்து காட்டி உள்ளனர். இந்தப்படம் எந்த மதத்தையும், ஜாதியை இழிவாக பேசவில்லை. சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல படத்தை மோகஜியும் அவரது குழுவினரும் கொடுத்துள்ளனர். மோகன்ஜி தனது தேசிய கடமையை செய்துள்ளார். திரெளபதியை போல் பல மடங்கு இந்த படத்தை மக்கள் வரவேற்பார்கள். இந்தப்படம் கிறிஸ்துவர்களை பெருமைப்படுத்தி உள்ளது. யாரையும் இழிவுப்படுத்தவில்லை. அதேசமயம் சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்னையை ஜாதி பிரச்னையாக மாற்றுபவர்களை எச்சரித்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !