ராக்கெட்ரி ரிலீஸ் தேதியை வெளியிட்ட மாதவன்
ADDED : 1520 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வரும் மாதவன், தற்போது தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
பல கட்டங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்து இறுதிக்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் 2022ம் ஆண்டு ஏப்ரல்1-ஆம் தேதி ராக்கெட்ரி படம் உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக மாதவன் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.