விஜய் 66 நாயகி யார்? - மூன்று நடிகைகள் பரிசீலனை
ADDED : 1466 days ago
தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய், இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பள்ளி இயக்கும் தனது 66ஆவது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ள நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெற உள்ளது.
தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கும் நிலையில் விஜய்யுடன் நடிப்பதற்கு மாஸ்டர் படத்தில் இருந்தே முயற்சி செய்து வரும் ராஷ்மிகா மந்தனாவும் தயாரிப்பாளர் தில்ராஜூவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று பிரபல நடிகைகளில் விஜய் 66ஆவது படத்தில் அவருடன் ஜோடி சேரப்போவது யார் என்கிற தகவல் இப்படத்தின் பூஜை அன்று வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.