உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகனுக்கு ஞானஸ்தானம் செய்து பெயரும் வைத்த சாண்டி மாஸ்டர்

மகனுக்கு ஞானஸ்தானம் செய்து பெயரும் வைத்த சாண்டி மாஸ்டர்

நடன இயக்குநராகவும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் சாண்டி மாஸ்டர். இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாண்டி மாஸ்டர் பிரபல மல்யுத்த வீரரான ஷான் மைக்கேல் என்ற பெயரை சூட்டியிருந்தார். இந்நிலையில் சாண்டி மாஸ்டர் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த மதத்தின் வழக்கப்படி குழந்தைக்கு தற்போது முறைப்படி ஞானஸ்தானம் செய்து வைத்துள்ளார். இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட அவர் அந்த பதிவில் தனது குழந்தை கிறிஸ்தவ குழந்தையாக மாற்றப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். ஞானஸ்தானத்தின் போது எடுக்கப்பட்ட சாண்டி மாஸ்டர் குடும்பத்தின் புகைப்படங்களும் அவரது குழந்தையின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !