உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் அஜித் - எச்.வினோத் கூட்டணி : உறுதிபடுத்திய போனி கபூர்

மீண்டும் அஜித் - எச்.வினோத் கூட்டணி : உறுதிபடுத்திய போனி கபூர்

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்துள்ளார். போனி கபூர், அஜித் குமார், ஹெச். வினோத் இணைந்துள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்துள்ள பேட்டியில் அஜித்குமாரின் அடுத்த படத்தையும் தானே தயாரிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தையும் ஹெச். வினோத் இயக்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஹெச்.வினோத்தை பாராட்டியுள்ள போனி கபூர், ஹெச்.வினோத்தின் திரைப்படங்கள் அவரை பற்றி பேசும் என்றும் தனது திரைப்படங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்துவதில் அவர் நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் போனி கபூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !