சமுத்திரக்கனியின் விநோதய சித்தம்
ADDED : 1468 days ago
சமுத்திரக்கனி நடித்து, இயக்கும் படம் விநோதய சித்தம். அக். 13ல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இப்படத்தில், நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க, தம்பி ராமைய்யா, ஜெயப்பிரகாஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமுத்திரகனி கூறுகையில், ‛‛வேடிக்கையான மனித மனத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் மையக்கரு. பார்ப்பவர் அனைவருடனும் இப்படத்தை கதை உரையாடும்,'' என்றார்.
சஞ்சிதா ஷெட்டி கூறுகையில், ‛‛பெற்றோரும் குழந்தைகளும் இப்படத்தை முழுமையாக விரும்புவர். குடும்ப பொழுதுபோக்காக இருக்கும்,'' என்றார்.