உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜோதிகா - சசிகுமார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா - சசிகுமார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சரவணன் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் உடன் பிறப்பே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சசிகுமார், ஜோதிகா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். சூரி, நிவேதிதா சதிஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். கிராமத்துக் கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் அப்டேட் வெளியாகியது. படம் அக்டோபர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்தனர். இப்போது. 'உடன்பிறப்பே' திரைப்படம் அக்டோபர் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !