உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர் மன்றத்தை விரிவு படுத்துகிறார் சிம்பு

ரசிகர் மன்றத்தை விரிவு படுத்துகிறார் சிம்பு

நடிகர் சிம்புவுக்கு ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது. அதனை அவரது தந்தை டி.ராஜேந்தரும், சித்தப்பா டி.வாசுவும் நிர்வகித்து வருகிறார்கள். இருவரும் அடிக்கடி மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசுவார்கள். இந்த நிலையில் சிம்பு தனது ரசிகர் மன்றத்தை விரிவு படுத்த தீர்மானித்திருக்கிறார்.

இது தொடர்பாக சிம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இயற்கையின் செயல்களால் நீண்ட நாளாக உங்களை நேரடியாக சந்திக்காமல் தொலைபேசி வழியாகவே பேசி வந்தோம். இப்போது இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் நற்பணி மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம். மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !