போதைப்பொருள் கடத்தி கைதான சிங்கம் 2 நடிகர்
ADDED : 1513 days ago
சினிமாவில் நடித்த கதாபாத்திரம் போலவே நிஜத்திலும் நடந்து கொண்டு நைஜீரிய நடிகர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம்-2 படம் உருவாகி இருந்தது. இந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழக வில்லன்களுக்கு உதவும் நைஜீரிய வில்லனாக டேனி சபானி என்கிற நைஜீரிய நடிகர் நடித்திருந்தார்.
அந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் அவரது உதவியாளராக உடன் நடித்தவர்களில் ஒருவர் தான் செக்வுமே மால்வின் என்பவர். அவர்தான் தற்போது நிஜத்திலும் போதைப்பொருள் கடத்தியதாக நைஜீரிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது.