உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அவர் வேற... இவர் வேற... : பிரபுதேவா பட இயக்குனர் தகவல்

அவர் வேற... இவர் வேற... : பிரபுதேவா பட இயக்குனர் தகவல்

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் டைரக்சனில் ஆக்சன் படம் ஒன்றில் நடித்து வருகிறார் பிரபுதேவா. தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா. ஏற்கனவே பொன்மாணிக்கவேல் என்கிற படத்திலும் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அந்தப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், அவரது போலீஸ் வேடத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பது தெரியாத நிலையில் இன்னொரு படத்திலும் பிரபுதேவா போலீசாக நடித்தால் சரிப்பட்டு வருமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் பலருக்கு எழுந்துள்ளது.

ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இதுபற்றி கூறும்போது, “பொன்மாணிக்கவேல் படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்துள்ளார் என்றாலும் அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்.. ஆனால் என்னுடைய படம் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வருகிறது. அதனால் இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது” என கூறியுள்ளார். அவர் கூறுவதை வைத்து பார்க்கும்போது காக்க காக்க சூர்யாவுக்கும் சிங்கம் சூர்யாவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதாக நாம் புரிந்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !