உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லாலின் ப்ரோ டாடி படமும் ஓடிடி ரிலீஸ் தான்

மோகன்லாலின் ப்ரோ டாடி படமும் ஓடிடி ரிலீஸ் தான்

லூசிபர் என்கிற படத்தின் மூலம் மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் ஒரு வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானதுடன் மோகன்லாலுக்கு முதல் 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார். அந்த படம் வெற்றி பெற்ற கையோடு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எம்பிரான் என்கிற பெயரில் உருவாக இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டும் என்பதால் அதை தற்காலிகமாக வைத்து ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது ப்ரோ டாடி என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கியுள்ளார் பிரித்திவிராஜ்.

இந்த படத்தை மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளாவில் தற்போதும் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சூழல் இல்லாததால் இந்த ப்ரோ டாடி படமும் ஓடிடியில்தான் ரிலீசாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !