உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் ராஷி கண்ணாவின் இரண்டு படங்கள்

அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் ராஷி கண்ணாவின் இரண்டு படங்கள்

இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவின் ஜோடியாக அறிமுகமான ராஷி கண்ணா தமிழில் அதன்பிறகு ஜெயம் ரவி, விஷால், விஜய்சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். இந்த வருடம் அதிக படங்களில் நடித்து வரும் நடிகையும் அவர்தான்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி ஜோடியாக இவர் நடித்த துக்ளக் தர்பார் படம் வெளியானது. ஆனால் ராஷி கண்ணாவுக்கு அது ராசியான படமாக அமையவில்லை. இந்த நிலையில் வரும் வாரங்களில் அவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. வரும் அக்-7ஆம் தேதி மலையாளத்தில் பிரித்விராஜ் ஜோடியாக அவர் நடித்துள்ள பிரம்மம் என்கிற படம் ரிலீஸ் ஆகிறது. இது ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். அந்தாதூன் வெற்றி பெற்றது போலவே பிரம்மம் படமும் வெற்றிபெறும் என்றும் நம்புகிறார் ராஷி கண்ணா.

அதேபோல அதற்கு அடுத்த வாரம் சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யாவின் ஜோடியாக இவர் நடித்துள்ள அரண்மனை 3 திரைப்படமும் வெளியாகிறது. ஏற்கனவே அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது பாகமும் நிச்சயம் ரசிகர்களை கவரும் எனவும் அதன்மூலம் தமிழில் தனது இடத்தை இன்னும் வலுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் திடமாக நம்புகிறார் ராஷி கண்ணா. வரும் காலங்களில் ராஷி கண்ணாவின் ராசி எப்படி ஒர்க் அவுட் ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !