உல்லாச கப்பலில் போதை பார்ட்டி - ஷாரூக்கானின் மகனை சுற்றி வளைத்த போலீசார்
ADDED : 1461 days ago
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் மத்தியில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நடிகர் நடிகைகளிடம் போதை ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யான்கான் தனது ஆண்-பெண் நண்பர்களுக்கு மும்பை கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உல்லாச கப்பலில் போதை பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்தியதை கண்டு பிடித்துள்ளனர்.
இதையடுத்து ஷாரூக்கான் மகன் ஆர்யான்கானின் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த 6 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதோடு ஆர்யான்கானுக்கும் இந்த போதை கடத்தலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது ஷாரூக்கான், அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.