கமலின் விக்ரம் 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1507 days ago
மாஸ்டர் படத்தை அடுத்து கமல் தயாரித்து, நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கிரைம் திரில்லர் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தபோது கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார் லோகேஷ் கனகராஜ்.
இந்தநிலையில் சென்னையில் நடைபெற்றவிக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்துள்ளது. கமல் தற்போது பிக்பாஸ் மற்றும் கட்சி விஷயத்தில் சற்று பிசியாக உள்ளாராம். இதனால், சில மாதங்கள் இடைவெளியில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.