பிரேசில் திரைப்பட விழா: சென்னையில் 4 நாட்கள் நடக்கிறது
ADDED : 1503 days ago
இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும், புது டில்லியில் உள்ள பிரேசில் தூதரகமும் இணைந்து சென்னையில் பிரேசில் திரைப்பட விழாவை நடத்துகிறது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள அல்லையன்ஸ் பிரான்சாய்ஸ் அரங்கில் இன்று ( அக்டோபர் 4)தொடங்கும் இந்த விழா 5, 6, மற்றும் 8ம் தேதிகளில் நடக்கிறது. இதில் ஒலகா, டிம் மயைா, எலிஸ், ரொமான்ஸ், ட்ரோபிகலியா என்ற புகழ்பெற்ற பிரேசில் படங்கள் திரையிடப்படுகிறது. தொடர்ந்து படங்கள் குறித்த விமர்சன அரங்கம், விவாத அரங்கம் நடக்கிறது.