மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1433 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1433 days ago
தமிழ் சினிமாவில் சில பல முன்னணி நடிகர்களை எளிதாக ஓவர் டேக் செய்து முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். “எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச் சட்டை, ரஜினி முருகன்” என தொடர்ச்சியாக சில முக்கிய வசூல் படங்களைக் கொடுத்ததால் அந்த முன்னணி இடத்திற்கு உயர்ந்தார்.
ஆனால், அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ' ஆகிய படங்கள் அந்த முன்னணி இடத்தை ஆட்டம் காண வைத்தன. இருந்தாலும் அவருக்கிருக்கும் இமேஜை சிறிதும் குறையாமல் காப்பாற்றி வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' இந்த வாரம் சனிக்கிழமை அக்டோபர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றாலும் எப்படியும் அடுத்த வாரத்தில் அது 100 சதவீதமாக உயரும் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். அது மட்டுமல்ல 'டாக்டர்' படம் தனக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையைக் கொடுக்கும் என சிவகார்த்திகேயன் பெரிதும் நம்புகிறார்.
படத்தின் இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பு இயக்கிய 'கோலமாவு கோகிலா' வெற்றிப் படம். அடுத்து அவர் இயக்கி வரும் 'பீஸ்ட்' விஜய் நடிக்கும் படம். தன்னை நம்புவதை விட இப்படத்தின் இயக்குனர் நெல்சனை அதிகம் நம்பியிருக்கிறாராம் சிவா. அதனால் தான் படத்தில் தனக்கு குறைவான வசனங்கள் இருந்தாலும் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்கிறார்கள்.
உயிரைக் காப்பாற்றுபவர்கள் டாக்டர்கள், சிவகார்த்திகேயனின் நம்பிக்கையை இந்த 'டாக்டர்' நிச்சயம் காப்பாற்றுவார் என கோலிவுட்டில் ஆரூடம் சொல்கிறார்கள்.
1433 days ago
1433 days ago