உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பாவில் இணையும் கனடா நடிகை

புஷ்பாவில் இணையும் கனடா நடிகை

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள பான் இந்தியா படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்தநிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சில பிரபல நடிகைகளிடத்தில் பேசி வந்தவர்கள். இப்போது கனடா நாட்டு டான்சரான நோரா பதேஹியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த பாடல் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நோரா பதேஹி பாலிவுட்டில் பல படங்களில் நடனமாடியிருப்பதோடு அங்கு அவரது நடனத்திற்கு ஒரு ரசிகர் வட்டமும் உருவாகியுள்ளது. அதேபோல் தெலுங்கிலும் ராஜமவுலியின் பாகுபலி, ஜூனியர் என்டிஆரின் டெம்பர் போன்ற படங்களிலும் இதற்கு முன்பு சிங்கிள் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !