உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்குமென்டரி படத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

டாக்குமென்டரி படத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சினிமாவுக்கு நிகராக வெளி தளங்களிலும் இசை அமைத்து வருகிறார். விளையாட்டு போட்டிகள், பண்டிகைகள், தேசப்பற்று, மொழி உயர்வு ஆகியவற்றுக்கும் இசை அமைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது டாக்குமென்டரி தொடர் ஒன்றுக்கு இசை அமைக்கிறார்.


சில வருடங்களுக்கு முன் டில்லியில், தற்கொலை செய்துகொண்ட புராரி குடும்பத்தினரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று ‛ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ்: தி புராரி டெத்ஸ்' என்ற பெயரில் தொடராக உருவாகியுள்ளது. ஷப்த், பார்ச்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய லீனா யாதவ் மற்றும் அனுபவம் சோப்ரா ஆகியோர் இயக்கி உள்ளனர். இது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை அமைத்துள்ளார்.


இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: லீனா யாதவுடன் சேர்ந்து பணியாற்றியது தனித்துவமான அனுபவமாக இருந்தது. மிகவும் சிக்கலான, உணர்வுப்பூர்வமான பிரச்சினையை இந்தத் தொடர் பேசுவதால் இதற்காக வேறுபட்ட, நுணுக்கமான அணுகுமுறை இசையில் தேவைப்பட்டது. பூடகமாக அதே சமயம் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு தொடரில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இதுவரை நான் செய்திராத ஒரு விஷயமாக இருந்தது, என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !