'சீனியர பாத்து கத்துக்கோங்க'! நீலிமா புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட்
ADDED : 1463 days ago
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முக்கிய பிரபலமாக வலம் வந்தவர் நீலிமா ராணி. இவர் கடைசியாக விஜய் டிவியின் அரண்மனைக்கிளி தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன்பின் திடீரென அந்த தொடரிலிருந்து விலகினார். நீலிமா தான் இரண்டாவது முறை கர்பமாக இருப்பதை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவிந்து வந்தனர்.
அவர் தற்போது தனது கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முன்னதாக சீரியல் நடிகைகள் பரீனா மற்றும் சமீரா தங்களது கர்ப்ப கால புகைபடங்களை வெளியிட்ட போது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்தது. தற்போது நீலிமாவின் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் 'கர்ப்ப காலத்தில் எப்படி அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு சீனியர பாத்து கத்துக்கோங்க' என பரீனா, சமீராவுக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.