பிரபாஸின் மேலும் இரண்டு மெகா படங்கள் அறிவிப்பு!
ADDED : 1565 days ago
தற்போது ராதே ஷ்யாம் படத்தை முடித்துள்ள பிரபாஸ், சலார், ஆதி புருஷ் படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் தனது 25ஆவது படம் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த படங்களைத் தொடர்ந்து இன்னும் இரண்டு மெகா படங்களில் நடிப்பதற்கு பிரபாஸ் ஒப்பந்தம் போட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சலார் படத்தை அடுத்த மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதோடு, சித்தார்த் ஆனந்த் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறார். இந்த இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளன.