ஷாருக்கான் மகனுக்கு ஆதரவு அளிப்பதா? ஹிருத்திக் ரோஷன் மீது பாய்ந்த கங்கனா ரணாவத்!
ADDED : 1458 days ago
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலிவுட் சினிமாவில் சில பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆர்யன்கானுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்து கடும் கோபமடைந்துள்ள கங்கனா ரணாவத் அவரை கடுமையாக சாடியுள்ளார். அதில், ‛தவறுகளை செய்பவர்களை நாம் மகிமைப்படுத்தக்கூடாது. இது அவர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். அவர்களின் செயல்களின் பாதிப்பை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அது அவரை சிறந்த மனிதராக மாற்றும். மேலும் யாராவது பாதிக்கப்படும்போது அவர்களைப் பற்றி கிசுகிசுக்காமல் இருப்பது நல்லது. ஆனால் குற்றம் செய்தவர்களை தவறு செய்யவில்லை என்று உணர வைப்பது குற்றச்செயலாகும்,' என்று ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட ஹிருத்திக் ரோஷனுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார் கங்கனா ரணாவத்.