நிறைவேறிய சபதம்
ADDED : 1500 days ago
பிரபுதேவா நடித்துள்ள சைக்கோ கில்லர் பாணி படம் ‛பஹிரா'. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தில், அமைரா தஸ்தர், ஜனனிஅய்யர், சஞ்சிதா ஷெட்டி, சாக்சி அகர்வால், காயத்ரி, சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், யாஷிகாஆனந்த் என பல நாயகியர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இயக்குனர் பேசுகையில், ‛உதவி இயக்குனராக இருந்த போது, சத்யம் தியேட்டருக்கு இசை வெளியீட்டு விழாவுக்காக வந்தேன். உள்ளே விடவில்லை. அப்போது என் படத்தின் அனைத்து விழாக்களும் இங்கு தான் நடக்க வேண்டும் என நினைத்தேன். இப்போது மகிழ்ச்சி' என்றார்.
பிரபுதேவா பேசுகையில், ‛ஆதிக் என்ன நினைத்தாரோ அதை எல்லாம் என்னை வைத்து செய்து விட்டார். சிறந்த நடிகர் அவர். இப்படம் ஆதிக் ஜானர் என்றே சொல்லாம். அமைரா தமிழே தெரியாவிட்டாலும் மிரட்டலாக நடித்துள்ளார்' என்றார்.