ஆண்ட்ரியாவின் புதுப்படம்
ADDED : 1556 days ago
ஆண்ட்ரியா நடித்துள்ள அரண்மனை 3, பிசாசு 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதுதவிர சில படங்களில் நடித்து வரும் இவர் அடுத்தப்படியாக ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஆஷாசரத், காளிவெங்கட், சந்தோஷ் பிரதாப் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பல படங்களுக்கு நடன இயக்குனராக பாபி ஆண்டனி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தின் துவக்கவிழா எளிமையாக நடந்தது. ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார்.