ஹிந்தியில் அறிமுகமாகும் அனிருத்
ADDED : 1468 days ago
தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் தெலுங்கிலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த 2019-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'ஜெர்ஸி' படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்ஸி படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.